தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்று இந்திய அணிக்காக 100 ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றாலும், அதிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி அடுத்தடுத்து 3 போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. இன்று 5ஆவது போட்டியில் விளையாடுகிறது. இது தமிழ்நாடு வீரர் அஸ்வினுக்கு 100ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.
கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலத்தில் அஸ்வின் ஒரு பேட்டராகவே இருந்தார். ஒரு தொடரில் 400 ரன்களுக்கு மேல் குவித்தும், தமிழ்நாடு அணி தேர்வாளர்கள் தன் மீது கவனம் செலுத்தாத நிலையில், யோசிக்க தொடங்கினார். தனது தந்தையுடன் நீண்ட விவாதம் நடத்திய அஸ்வின், பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த அஸ்வின், பின்னர் ஆப் ஸ்பின்னராக மாறினார்.
2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வான அஸ்வின் இரு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அடுத்த தொடரில், ஒபனிங் பவுலராக தோனி களம் இறக்க, 13 விக்கெட்களை அள்ளினார். இதையடுத்து இந்திய அணிக்கு தேர்வான அஸ்வின், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அசத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்களையும், 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்களையும் வீழ்த்திய அவர், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய அஸ்வின், தன்னால் சர்வதேச போட்டிகளில் பேட்டிங்கும் செய்ய முடியும் என நிரூபித்தார்.
எனினும் அஸ்வினுக்கு எதிராக இங்கிலாந்து ரூபத்தில் வந்தது. 2012 இந்தியா வந்த இங்கிலாந்து வீரர்கள் அலஸ்டர் குக், கெவின் பீட்டர்சன் ஆகியோர் அஸ்வினை அடித்து துவம்சம் செய்ய அவரது கேரியர் கேள்விக்குரியானது. எனினும் உள்நாட்டில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் 29 விக்கெட்களை வீழ்த்தி கம்பேக் கொடுத்தார் அஸ்வின்.
வெளிநாடுகளில் இந்திய அணி விளையாடும்போதும், பெரும்பாலும் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆல்ரவுண்டர் என்ற முறையில் அஸ்வினைவிட ஜடேஜாவுக்கே வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை அஸ்வின் பயன்படுத்த தவறுவதில்லை. குறிப்பாக 2016ல் மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இரு சதங்களை விளாசி அசத்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான நடப்புத் தொடரில் 500 விக்கெட்கள் என்ற மைல் கல்லை தொட்ட அஸ்வின், அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய அனில் கும்பளேவின் சாதனையையும் சமன் செய்தார்.
குடும்பத்தினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அஸ்வின், தனது தாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பாதியில் விலகி சென்னை திரும்பினார். எனினும் தாய் குணமடைந்ததால் மீண்டும் அணிக்கு திரும்பி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இதையும் படிங்க…
டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து மேட்ச்சையும் ஃப்ரீயா பார்க்கலாம்!! டிஸ்னி ஹாட்ஸ்டார் அறிவிப்பு…
தோனி, ஜாகீர்கான் போன்ற ஜாம்பாவான்கள் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் அஸ்வினுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து முதல் வீரராக அவர் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் காலடி எடுத்துவைக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…