தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
சுழல் பந்து வீச்சில் மிரட்டிய இந்திய அணியின் பவுலர்கள் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின்4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியுள்ளனர். ஏற்கனவே நடந்து முடிந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில்டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரஜத் பட்டிதாருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல்லும், ஆகாஷ் தீபிற்கு பதிலாக பும்ராவும் களத்தில் இறங்கினர்.
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ஸாக் க்ராவ்லே – பென் டக்கெட் இணை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இருவரும் முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் சேர்த்தனர். டக்கெட் 27 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஆலி போப் 11 ரன்னும், ஜோ ரூட் 26 ரன்னும், ஜானி பேர்ஸ்டோ 29 ரன்னும் எடுத்தனர். பென் ஃபோக்ஸ் 24 ரன்னில் வெளியேறினார்
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் நிலைத்து நின்று ஆடிய ஸாக் க்ராவ்லே 108 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 57.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜடேஜா 1 விக்கெட்டை கைப்பற்றினார். இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர்.
இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
இந்திய அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், தேவ்தத் பாடிக்கல், ரவீந்திர ஜடேஜா, சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்து அணி : சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…