ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 122 ரன்கள் உடன் கடைசி வரை களத்தில் நின்று இங்கிலாந்தின் ரன் குவிப்புக்கு தூணாக நின்றார்.
ராஞ்சியில் நேற்று தொடங்கிய 4 ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் பென் டக்கெட் 11 ரன்னிலும், ஆலி போப் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 42 ரன்கள் சேர்த்த ஸாக் கிராவ்லே, டெஸ்டில் இன்று அறிமுகமான ஆகாஷ் தீப் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் கைப்பற்றி அசத்தினார். ஜானி பேர்ஸ்டா 38 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 112 ரன்களுக்கு இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது ஜோ ரூட் – பென் போக்ஸ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப அமைத்தனர். போக்ஸ் 47 ரன்னிலும், டாம் ஹார்ட்லி 13 ரன்னிலும் ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 106 ரன்களும், ஆலி ராபின்சன்31 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
Also Read :
குடும்ப வறுமை.. 3 ஆண்டுகள் கிரிக்கெட்டில் விலகல்… யார் இந்த ஆகாஷ் தீப்?
இரண்டாவது இன்று தொடங்கிய இங்கிலாந்து அணியை ரவிந்திர ஜடேஜா தனது சுழல் ஜாலத்தால் சுருட்டினார். ஆலி ராபின்சன், சோகிப் பாஷிர், ஜேம்ஸ் ஆன்டர்சன் விக்கெட்களை ஜடேஜா வீழ்த்தினார். ஜோ ரூட் 122 ரன்கள் உடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்த போது ஆன்டர்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பென் போக்ஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். யாஷ்வால் மற்றும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 63 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…