பட மூலாதாரம், afp
மலேசியத் தொழிலாளர்கள் ( ஆவணப்படம்)
மலேசியாவின் மின்னணுத் தொழில்துறையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கட்டாயமாக வேலை வாங்கப்படும் நிலையில் இருக்கலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கருதுகிறது.
‘வெரிட்டி’ என்ற இந்த நிறுவனம் , நூற்றுக்கணக்கான தொழிலாளர்களிடையே நடத்திய ஆய்விற்குப் பின்னர், நாணயமற்ற முகவர்கள் ஆளெடுக்கும்போது மிக அதிகமான மற்றும் வெளிப்படையற்ற வகையில் பணம் வாங்குவதால், இந்தப் பணத்தைத் திரும்பத் தருவதற்கு தொழிலாளர்களால் சிரமமாக இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறது.
பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்) தர நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் அது கூறியது.
ஆப்பிள் , சாம்சங், சோனி போன்ற பல சர்வதேச நிறுவனங்களுக்கு மின்னணுப் பொருட்களின் உதிரிப்பாகங்களைத் தயாரிக்க மலேசியா பல லட்சக்கணக்கானோரை வேலைக்கு வைக்கிறது.