மகன் ஆனந்தின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தனது மனைவி நீடா அம்பானியுடன் டூயட் பாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி இவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நேற்று முன்தினம் பிரமாண்டமாக தொடங்கியது.
இந்த விழாவில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், பில்கேட்ஸ், பாடகி ரிஹானா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, கிரோன் பொலார்டு, ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், இயக்குனர் அட்லீ என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த கொண்டாட்டத்தில் சர்வதேச புகழ் பெற்ற பாப் பாடகி ரிஹானாவின் கலைநிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தனது மனைவி நீடா அம்பானியுடன் இணைந்து டூயட் பாடி அசத்தினார். இது தொடர்பான வீடியோ ஒன்று கவனம் பெற்று வருகிறது.
Anant Ambani, Radhika Merchant Pre-Wedding Day 2: Mukesh Ambani and Nita Ambani present a duet dance performance at the Jamnagar celebrations on the Bollywood classic ‘Pyar Hua, Ikraar Hua’ #AnantRadhikaWedding #AnantAmbani #AnantRadhikaPreWedding #Jamnagar #MukeshAmbani… pic.twitter.com/3HOimRCz4g
— CNBC-TV18 (@CNBCTV18News) March 3, 2024
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த், அவரது மனைவி, லதா, மகள் ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் இன்று பங்கேற்றுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…