பிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மாதந்தோறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.8500 வரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பிகாரில் உள்ள பக்தியார்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ”நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு இருப்பதால், நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், 2022ஆம் ஆண்டில் நரேந்திர மோடி அரசால் அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வதுடன், ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.8500 வரவு வைக்கப்படும்”
हिमाचल प्रदेश के युवाओं में भारतीय सेना में शामिल होकर देश की रक्षा करने का गजब का जज़्बा है।
अग्निवीर योजना इन बहादुर युवाओं की देशभक्ति का अपमान है।
INDIA की सरकार बनते ही हम सबसे पहले अग्निवीर योजना को खत्म करेंगे।
हम देश में दो तरह के शहीद नहीं बनने देंगे, हर सैनिक को वही… pic.twitter.com/yaHytVLCeh
— Rahul Gandhi (@RahulGandhi) May 26, 2024
காங்கிரஸ், சமாஜவாதி, ஆம் ஆத்மி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியின் கீழ் மக்களவைத் தேர்தலை சந்தித்து வருகின்றன.
6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.