இந்நிலையில், கடாஸ் ராஜ் கோயிலுக்கு ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்தாண்டு மகாசிவராத்திரியை கொண்டாட ஏதுவாக, பக்தர்கள் வசதிக்காக பாகிஸ்தான் தூதரகம் 112 பேருக்கு விசாக்களை வழங்கியுள்ளது.
விசா வேண்டி 1000 பேர் வரை விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் அவர்களில் வெறும் 112 பேருக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து சுமார் 100 பேர் அடங்கிய குழுவினர் இன்று(மார்ச் .6) பாகிஸ்தான் புறப்பட்டனர். இந்தியாவிலிருந்து செல்லும் பக்தர்கள் இம்மாதம் 12-ஆம் தேதி வரை பாகிஸ்தான் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.