பங்குனி உத்திரம் 2024- யை முன்னிட்டு, ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது ஆலய நிர்வாகம்.
சிங்கப்பூரில் உள்ள 31 மார்சிலிங் ரிஸ் சாலையில் (31 Marsiling Rise) அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயம் (Sri Siva Krishna Temple). பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் வரும் மார்ச் 24- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.
பெண் கால்களை இழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு சிறை, வாகனமோட்ட தடை
மார்ச் 24- ஆம் தேதி காலை 06.00 மணிக்கு ஆலய நித்ய பூஜையும், காலை 07.00 மணி முதல் காலை 10.00 மணி வரை பக்தர்கள் கலந்து கொள்ளும் தங்கவேலுவுக்கு பால்குட அபிஷேகமும், காலை 11.15 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், நண்பகல் 12.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.