நூலக புத்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட 1994 ஆம் ஆண்டில் போடப்பட்ட சூப்பர் மார்க்கெட் பில் ஒன்று சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. 1994-இல் பொருட்களின் விலை இவ்வளவு குறைவாக இருந்ததா என்ற ஆச்சரியத்தில் பில்லை பார்த்த நெட்டிசன்கள் கமென்ட் செய்துள்ளனர்.
பழைய புத்தகங்களை திறந்து பார்க்கும் போது அதில் ஏதாவது ஆச்சரியப்படுத்தும் தகவல்கள் கிடைக்க கூடும். உதாரணமாக அந்த புத்தகங்களுக்கு இடையே ஏதாவது கடிதத்தை, அல்லது முக்கியமான தாள்களை பல ஆண்டுகளுக்கு முன்பு யாரேனும் வைத்திருக்கலாம். அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை ஒருவர் வீட்டிற்கு படிக்க எடுத்து வந்துள்ளார்.
புத்தகத்தின் பக்கங்களை புரட்டிப் பார்த்தபோது, அதில் 1994 ஆம் ஆண்டில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் போடப்பட்ட பில் ஒன்று கிடைத்துள்ளது. இதனை அவர் சமூக ஊடகமான Reddit இல் பதிவிட்டிருக்கிறார். இந்த பில்லை பார்க்கும் போது 30 ஆண்டுகளுக்கு முன்பு விலைவாசி எந்த அளவுக்கு குறைவாக இருந்தது என்பதை உணர முடிகிறது.
1994 ஜூலை 23 ஆம் தேதி இந்த பில் பிரிட்டன் நாட்டின் கோவென்ட்ரி நகரில் போடப்பட்டுள்ளது. பில்லில் அரைத்த மாட்டிறைச்சி, மாட்டிறைச்சி பர்கர் உள்ளிட்டவற்றின் விலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்பில் 1994 ஆண்டு ரூ. 57-க்கு விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சி தற்போது ரூ. 523 க்கு விற்பனையாகிறது. அதாவது 30 ஆண்டுகளில் 10 மடங்கு அளவுக்கு விலைவாசி அதிகரித்திருக்கிறது.
இதேபோன்று பில்லில் குறிப்பிடப்பட்டிருந்த கார்டியன் இதழின் அன்றைய விலை இந்திய மதிப்பில் ரூ. 52 ஆக இருந்தது. தற்போது அதன்விலை ரூ. 514 ஆகும். இந்த பில்லிற்கு சுவாரசியமாக கமென்ட் செய்துள்ள நெட்டிசன்கள், அன்றைக்கு விலைவாசி எவ்வளவு குறைவாக இருந்தது என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர், இன்று போடப்படும் பில்கள் இன்னும் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பொக்கிஷமாக பார்க்கப்படும் என்று கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…