அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த காலநிலை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடித்தால், தொடர்ச்சியான நீர் விநியோகத்தை வழங்க முடியதா நிலை ஏற்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்னும் சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக முன்பை விட மக்கள் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தப் பழகிவிட்டனர்.
இதனால் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|