Last Updated:
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்த பிறகு, வரும் மார்ச் மாதம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டிமிஸ்-2 திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1970-களுக்குப் பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அழைத்து செல்வதாக ஆர்டிமிஸ்-2 என்ற திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முன்னெடுத்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நிலவுப் பயணத்திற்கு திட்டமிட்டு, கடந்த திங்கட்கிழமை ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவதற்கான சோதனை நடைபெற்றது. அப்போது, ராக்கெட்டின் அடிப்பகுதியில் ஹைட்ரஜன் கசிவு கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், அதனை ஆய்வு செய்து தொழில்நுட்பக் கோளாறை முழுமையாக சரி செய்ய கால அவகாசம் தேவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விண்வெளிப் பயணத்திற்காக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 3 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனடா நாட்டு வீரர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு சரி செய்த பிறகு, வரும் மார்ச் மாதம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.
Feb 04, 2026 10:35 AM IST


