சாமுவேல் ஸ்மித் என அடையாளம் காணப்பட்ட நபர் போதைப்பொருளைப் பயன்படுத்தியதற்காக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தம்பதியர், அந்த நபர் பயன்படுத்திய டவலை அப்புறப்படுத்தி அறைகளையும், குளியல் அறையையும் முழுமையாகச் சுத்தம் செய்தனர்.
“அவர் நிர்வாணமாக எங்கள் படுக்கையில் அமர்ந்திருந்தார். அவர் குளித்துக்கொண்டிருந்தபோது என் வீட்டில், மலம் கழித்துவிட்டும் சென்றிருக்கிறார். வீட்டு உரிமையாளர்களுக்கு இது ஒரு நல்ல பரிசாக இருக்கும் என்று அவர் முடிவு செய்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் எந்த மாதிரியான மனநோயில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எந்த வகையான மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை அப்படி அச்சுறுத்த வேண்டாம்’’ என்று கெரிகன் மனம் வருந்தியுள்ளார்.
வீட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கூடுதல் கேமராக்கள் வாங்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், மக்கள் செக்யூரிட்டி கேமராக்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும், எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாததால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
உங்களது வீட்டில் செக்யூரிட்டி கேமரா உள்ளதா? கமென்டில் சொல்லுங்கள்!