10
இராஜகிரிய, நாவல அல் மஸ்ஜிதுல் பத்ரிய்யீன் ஜும்ஆ மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபையினர் காஸாவில் உள்ள சிறுவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடை வழங்கினர்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம், பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் காசோலையை கையளித்தனர்.
இராஜகிரிய அல் மஸ்ஜிதுல் பத்ரிய்யீன், நாவல ஜும்ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான அபு ஹனீபா, இப்னு ஷுஐப் மற்றும் மொஹிதீன் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாவல ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத் உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நன்கொடையிலிருந்து இது வழங்கப்பட்டதாக மொஹிதீன் காதர் தெரிவித்தார்.
ருஸைக் பாரூக்