நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் (17) கடும் வரட்சி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால், குடிநீரை பெற்றுக்கொள்ள சிரமப்படும் பொதுமக்கள் 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி, அது தொடர்பில் அறிவிக்க முடியுமென இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாகவும் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவுகின்றன கடுமையான வறட்சி மற்றும் அதிகரித்த நீர்ப்பாவனை போன்றவற்றால் தெகிவளை, இரத்மலானை, மொறட்டுவை, பாணந்துறை, வட்டுவ மற்றும் வஸ்கடுவ ஆகிய பிரதேசங்களுக்கான நீர் வழங்கலை மேற்கொள்வதில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது.
இதையும் படியுங்க : நிலவும் வெப்பம் காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்
இதனால் மேற்படி பிரதேசங்களுக்கான தொடர்ச்சியான தடையற்ற நீர் வழங்கலை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, குறித்த பிரதேசத்தில் உள்ள நீர் பாவனையாளர்கள் நீரினை சிக்கனமாகவும் சேமிப்புடனும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

