விழாவை கல்லூரி டீன் ராபின்சன் தொடங்கி வைத்தார். காரைக்குடி என்சி.சி கமாண்டிங் அதிகாரி எஸ்.கே. மிஸ்ரா சிறப்புரையாற்றினார். மாணவ,மாணவியருக்கு மின்னியல்,மின்னணுவியல், கேட், குறித்த திறன் தேர்வுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரா. திவ்யபிரசாந் வரவேற்றார். கணிணி அறிவியல் பேராசிரியை இளவரசி நன்றி கூறினார். லெ.விலக்கு மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரியில் நடந்த தேசிய அறிவியல் தின விழாவில் சிறப்பு விருந்தினர் மிஸ்ராவிற்கு அறக்கட்டளை சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.