இங்கிலாந்து மற்றம் ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது, திடீரென களத்திற்குள் எண்ணெய் உடன் புகுந்த நபரை இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் தூக்கிச்சென்று பாதுகாவலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மற்றம் ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது, திடீரென களத்திற்குள் எண்ணெய் உடன் புகுந்த நபரை இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் தூக்கிச்சென்று பாதுகாவலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி நீக்கப்பட்டு ஜோஷ்வா டங்க் சேர்க்கப்பட்டார். அதேபோல் ஆஸி. அணி தரப்பில் போலாந்த் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்ட் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தரப்பில் டேவிட் வார்னர் – கவாஜா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் ஓவரை வீசினார்.
முதல் ஓவரில் வார்னர் பவுண்டரி விளாசி ஆஸி. அணியின் ரன் கணக்கை தொடங்கி வைத்தார். முதல் ஓவர் முடிவடைந்த நிலையில், திடீரென ரசிகர் ஒருவர் கைகளில் எண்ணெய் உடன் களத்திற்குள் புகுந்தார்.
இவரை தடுக்க இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய அணியின் வார்னர் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பித்த போராட்டக்காரர், களத்தின் சில பகுதிகளில் எண்ணெயை சிந்தினார்.
இதையடுத்து அவரை பிடித்த இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ், அவரை குண்டுகட்டாக பவுண்டரி எல்லை வரை தூக்கிச் சென்று பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தார். இதையடுத்து ஓய்வறைக்கு சென்ற அவர், மாற்று ஜெர்சியை அணிந்து களம் புகுந்தார்.
இதனால் ஆட்டம் சில நிமிடங்கள் நின்று தாமதமாக தொடங்கியது.