தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருதாளர் திருக்களம்பூர் ராமச்சந்திரனுக்கு கேசராபட்டி சிடி சர்வதேசப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி சி டி சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக சென்னையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களால் தமிழ் செம்மல் விருது கேசராபட்டி சிடி சர்வதேச பள்ளியின் செயல் அலுவலர் நெ.ராமச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கேசராபட்டி சிடி சர்வதேச பள்ளியின் சார்பாக அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.