டெஸ்ட் போட்டிகளில் சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடித்து அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையை இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏற்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் யஷஸ்வி 700-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டெஸ்ட் போட்டி இமாசல பிரதேசம் தர்மசாலாவில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்துள்ள இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து முதல் நாளில் 30 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து 1,028 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ரன்களை எடுப்பதற்கு அவருக்கு 9 டெஸ்ட் போட்டிகளும் 16 இன்னிங்ஸ்களும் தேவைப்பட்டன. முன்பு 11 போட்டிகளில் சுனில் கவாஸ்கர், செதேஷ்வர் புஜாரா 1000 ரன்களை கடந்ததே இந்திய வீரர் செய்த சாதனையாக இருந்தது. இதனை தற்போது யஷஸ்வி முறியடித்துள்ளார்.
இதேபோன்று 1000 ரன்களை கடந்த 4 ஆவது இளம் இந்திய வீரர் என்ற புதிய ரிக்கார்டையும் அவர் ஏற்படுத்தியுள்ளார். 22 வயது 70 நாளில் யஷஸ்வி டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். முதலிடத்தில் 19 வயது 217 நாட்களில் சச்சின் டெண்டுல்கரும், 2 ஆவது இடத்தில் 21 வயது 27 நாட்களில் கபில் தேவும், 3 ஆவது இடத்தில் 21 வயது 197 நாட்களில் ரவி சாஸ்திரியும் உள்ளனர்.
2023 ஆகஸ்ட்டில் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 போட்டி மற்றும் 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,028 ரன்கள் எடுத்துள்ளார். இவற்றில் 2 இரட்டை சதங்களும், 3 சதங்களும், 3 அரைச்சதங்களும் அடங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…