செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் விவகாரத்தால் தங்களது காா்களின் விலைகள் உயரக்கூடும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸா போரின் எதிரொலியாக, செங்கடல் வழி சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நிறுவனத்தின் ஏற்றுமதியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் நிறுவனத்தின் செலவுகள் அதிகரித்து, அதன் தாக்கம் தயாரிப்புகளின் விலைகளில் எதிரொலிப்பதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 2.7 லட்சம் காா்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. கடந்த ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 23,921-ஆக இருந்தது.