சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஏனைய மூன்று பாடங்கள் தொழில் மற்றும் சுற்றாடல் அறிவை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளில் எந்தவொரு மாணவரும் சித்தியடையும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் விருப்பங்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தும் பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 3,37,000 மாணவர்களில் 50,000 மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி நாடு முழுவதும் 300 மையங்களில் நாளை (05) முதல் நடைபெறவுள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

