கூச்சிங்:
சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 16 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேராக இருந்த நிலையில், இன்று நண்பகல் நிலவரப்படி 121 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேராக அதிகரித்துள்ளது.
சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழுவின் அறிக்கையின்படி, சரவாக்கின் தெற்குப் பகுதிகளில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கூச்சிங்கில், 82 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 194 பேர் டேவான் ஆர்-பியாங் கம்போங் சினார் புடி பாருவில் உள்ள பிபிஎஸ்ஸில் உள்ளனர், அதே சமயம் 23 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 98 பேர் டேவான் மஸ்யராகத் ஸ்டாபோக்கில் உள்ள பிபிஎஸ்ஸில் உள்ளனர்.
இதற்கிடையில், பாஹுவில், 16 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 64 பேர் டேவான் கம்போங் செகாங்கில் உள்ள தற்காலிக தங்குமிடத்தில் தங்கியுள்ளனர்.
சரவாக்கின் தெற்குப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.