இந்திய அணியில் முக்கிய மாற்றம்
இரண்டு லீக் போட்டிகளிலும் இந்தியா சேஸிங்கில் களமிறங்கிய நிலையில், சிறப்பாக பேட்டி செய்து வெற்றியும் பெற்றுள்ளது. அந்த வகையில் கில், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் பார்ம், ரோஹித்தின் அதிரடி இந்திய டாப் ஆர்டரை வலுவாக வைத்துள்ளது. மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் நல்ல பார்மில் இருந்தாலும் அவருக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு ரிஷப் பந்த் இறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பந்த் இடது கை பேட்ஸ்மேனாக உள்ளார். அந்த வகையில் மற்ற இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாதபோதிலும், ரிஷப் பந்த் தனிப்பட்ட ரீதியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

