கூலிம், மார்ச்-
கெடா மாநில கராத்தே கழகத்தின் 27ஆம் ஆண்டுபொதுக்கூட்டம் வரும் 24.3.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு கெலாடி,தாமான் நெனாஸ்சில் உள்ள விஸ்மா கராத்தேவில் நடைபெறவுள்ளதாக அதன் மாநில செயலாளர் பி. செல்வராஜூ தெரிவித்தார்.
கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் எஸ். ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இப்பொதுக்கூட்டத்தை நாடறிந்த கராத்தே மாஸ்டரும் மலேசியா ஒகினோவா கோஜு ரியோ சம்மேளனத்தின் தேசிய தலைவருமான மஹாகுரு கே. ஆனந்தன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
ஆண்டுபொதுக்கூட்டத்தில் கெடா மாநில கராத்தே கழகத்தில் மாநிலம் மாவட்ட நிலையில் சிறப்பான முறையில் பயிற்சியை நடத்தி வரும் பயிற்றுநர்கள், சேவையாற்றி வரும் கழகப் பொறுப்பாளர்களுக்கு சிறப்பு செய்யப்படவுள்ளது.
ஆண்பொதுக்கூட்டத்திற்கு பிறகு கழகத்தில் இருக்கும் முஸ்லிம் அன்பர்களுக்காக நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஒன்றை கராத்தே கழகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி இரவு 7.31 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடக்கம் காணும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே மாநில கராத்தே கழகத்தின் ஆண்டுபொதுக்கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறவுள்ளதால் மாநில பொறுப்பாளர்கள், வட்டார பொறுப்பாளர்கள், மாணவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்பாக விஸ்மா கராத்தேவிற்கு வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.