திருமண கொண்டாட்ட விழாவில் ஷாருக்கான் குடும்பம்
ஷாருக்கான், கௌரி, சுஹானா மற்றும் ஆர்யன் கான் ஆகியோர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் கலந்து கொள்வதற்காக ஜாம்நகர் வந்தனர்.
ரிஹானா குழுவினர் வருகை
கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக ரிஹானா குழுவை சேர்ந்த ஆடம் ப்ளாக்ஸ்டோன், ஜே பிரவுன் உள்ளிட்டோர் ஜாம் நகருக்கு வருகை தந்துள்ளனர்.
களைகட்டும் ஜாம்நகர்
இந்த திருமண கொண்டாட்டத்துக்காக உலக தலைவர்களும், பிரபலங்களும் ஜாம் நகருக்கு வருகை தந்துள்ளனர்
டாப் தலைவர்கள் பங்கேற்பு
உலக மகா கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், சாதனையாளர்கள், அரசியலின் டாப் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானோர் நாளை தொடங்கும் கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்.
3 நாட்கள் கொண்டாட்டம்
இதையொட்டி திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிப்ரவரி 1 முதல் தொடங்கி 3 நாட்கள் உலகமே வியக்கும் வகையில் நடைபெறுகிறது.
ஜூலை 12 ஆம் தேதி திருமணம்
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் பிரபல தொழிலதிபர் விரேன் மெர்ச்சென்டின் மகள் ராதிகா மெர்ச்சென்டிற்கும் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- First Published :