உலகளவில் காற்று மாசுபாடு அடைந்த நகரங்களில் புதுதில்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
புதுதில்லிக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு இப்பட்டியலில் 3-ஆம் இடம் வகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, கடந்த ஆண்டில் உலகளவில் காற்றின் தரம் மோசமாக பதிவாகியுள்ள நாடுகளில் இந்தியா 3-ஆம் இடம் வகிக்கிறது.