புனித ரமழான் மாதத்தையிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கி வைக்கப்பட்ட ஒருதொகை பேரீச்சம் பழங்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து ஏனைய பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
காத்தான்குடி மற்றும் அதனை அண்டியுள்ள இடங்களில் அமைந்துள்ளதும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதுமான 59 பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிலையில் பள்ளிவாசலொன்றுக்கு 20 கிலோகிராம் படி பேரீச்சம் பழங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலக பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்.சியாட் தெரிவித்தார்.
பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இப்பேரீச்சம் பழங்கள் வழங்கி வைக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.
The post காத்தான்குடியில் பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிப்பு appeared first on Thinakaran.