ஹட்டன் – கொழும்பு வீதியின் கித்துல்கலையை அண்மித்த பிரதேசத்தில் ஒரு மாத குழந்தை ஒன்று தாயின் கையிலிருந்து நழுவி பிரதான வீதியில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் உள்ளிட்ட குழுவினர் நுவரெலியா சென்று அங்கிருந்து நீர்கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், தாய் உறங்கிய போது, கையிலிருந்த குழந்தை வழுக்கி வீதியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு முச்சக்கரவண்டிகளில் குழந்தையின் தாய் உட்பட இரு குடும்பங்கள் நீர்கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி நள்ளிரவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது, முச்சக்கரவண்டிக்கு பின்னால் பயணித்த காரில் இருந்தவர்கள், வீதியில் குழந்தையொன்று கிடப்பதைக் கண்டு, கித்துல்கல பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, குழந்தையை மீட்ட பொலிஸார் கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், குழந்தை இல்லாததை அறிந்த தாய் உள்ளிட்டவர்கள் திரும்பி வந்து தேடிய நிலையில், குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதை அறிந்துள்ளனர்.
சிறிய கீறல் காயங்களுக்கு உள்ளாகியிருந்த குழந்தை, கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

