ஆதார் அடிப்படையிலான e-KYC ஆதென்டிஃபிகேஷனை பயன்படுத்துவதன் மூலமாக சேமிப்பு கணக்கை திறப்பதற்கான ஒரு எளிமையான செயல்முறையை ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி வழங்குகிறது. இது தேவையற்ற ஆவண சரிபார்ப்புகளை தவிர்க்க உதவுகிறது.
இந்த செயல்முறையை துவங்குவதற்கு நீங்கள் உங்களுடைய ஆதார் எண்ணுடன் ஏதேனும் ஒரு அதிகாரம் பெற்ற ஏர்டெல் ரீடைல் ஷோரூமை அணுக வேண்டும். ஆக்டிவாக இருக்கும் மொபைல் நம்பர், ஆதார் அட்டை மற்றும் PAN கார்டு போன்றவை இந்த KYC க்கு அத்தியாவசியமானவை. ஒருவேளை உங்களிடம் PAN கார்டு இல்லையென்றால் படிவம் 60 ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
உங்களுடைய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு கணக்கு அமைக்கப்பட்டதும் பல்வேறு விதமான சேவைகளை பயன்படுத்துவதற்கான அணுகலை நீங்கள் பெறுவீர்கள். அதில் இந்தியா முழுவதும் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கிகளில் கேஷ் டெபாசிட் மற்றும் வித்டிராயல், மொபைல் மற்றும் DTH ரீசார்ஜுகள், யுட்டிலிட்டி பில் பேமெண்ட் மற்றும் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் ஷாப்பிங் போன்றவை அடங்கும்.
உங்களுடைய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கை நிர்வகிப்பதற்கு நீங்கள் அருகில் உள்ள வங்கிக்கு செல்லலாம் அல்லது My Airtel அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.
அக்கவுண்ட் ஆக்டிவேஷன் செய்வதற்கு உங்களிடம் ஆதார் அட்டை மற்றும் ஆக்டிவான மொபைல் நம்பர் இருக்க வேண்டும். மாறாக ஆதார் இல்லாமல் வங்கிக் கணக்கை திறப்பதற்கு நீங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுகி, அக்கவுண்ட் திறப்பதற்கு படிவத்தை நிரப்ப வேண்டும்.
ஆன்போர்டிங் செயல்முறையின்பொழுது உங்களுடைய PAN கார்டை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். ஒருவேளை உங்களிடம் PAN கார்டு இல்லையென்றால் படிவம் 60 ஐ வழங்க வேண்டும்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு திறப்பதற்கான தகுதி வரம்புகள் :
ஆதார் அட்டை, PAN கார்டு மற்றும் இன்டர்நெட் அணுகல் கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருக்கக் கூடிய எந்த ஒரு ஏர்டெல் சப்ஸ்க்ரைபரும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கை தாமாகவே திறக்கலாம். ஆதார் அடிப்படையிலான எலெக்ட்ரானிக் KYC மூலமாக ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு சில நிமிடங்களிலேயே அக்கவுண்டை திறக்கலாம்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கின் முக்கியமான அம்சங்கள் :
-
5,00,000 -க்கும் மேற்பட்ட வங்கிகளை எளிதாக அணுகுதல்.
-
2.5% என்ற ஆண்டுவாரியான வட்டி விகிதம்
-
1 லட்ச ரூபாய் வரையிலான இலவச பர்சனல் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ்
-
மினிமம் பேலன்ஸ் தேவையில்லை
-
விர்ச்சுவல் டெபிட் கார்டு
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு திறப்பதற்கான முறை:
1. Airtel Thanks அப்ளிகேஷனை உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவும் அல்லது வெப்சைட்டுக்கு செல்லவும்.
2. உங்களுடைய மொபைல் நம்பரை என்டர் செய்யவும்.
Also Read : ஒன்றாக இணையும் நாட்டின் 2 பிரபலமான வங்கிகள்… நடக்கப்போகும் மாற்றங்கள் என்ன?
3. PAN, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் அல்லது ஆதார் அட்டை போன்ற ஆப்ஷன்களில் இருந்து ஒன்றை உங்களுடைய அடையாள சான்றிதழாக தேர்வு செய்யவும்.
4. PAN நம்பர், வாக்காளர் ID, அல்லது ஓட்டுனர் உரிமம் எண்ணை எண்டர் செய்யவும்.
5. உங்களுடைய மொபைல் நம்பருக்கு அனுப்பப்பட்ட OTP (ஒன் டைம் பாஸ்வேர்ட்) ஐ என்டர் செய்யுங்கள். அவ்வளவுதான் உங்கள் கணக்கு தொடங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…