2021 ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சியை முக்கியமான அணிகள் எல்லாம் மிகவும் தாமதமாகவே தொடங்கியது.
கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசனில் சிஎஸ்கே அணி வீரர்கள் மிகவும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். அதிலும் கேப்டன் தோனி மிகவும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்.
2021 ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சியை முக்கியமான அணிகள் எல்லாம் மிகவும் தாமதமாகவே தொடங்கியது.
15 நாட்களுக்கு முன்புதான் பெங்களூர், மும்பை அணிகள் எல்லாம் ஐபிஎல் வலைப்பயிற்சியை தொடங்கியது. ஆனால் சென்னை அணியோ கடந்த 1 மாதத்திற்கு முன்பாகவே பயிற்சியை தொடங்கிவிட்டது.
இந்த பயிற்சியில் ரெய்னா மட்டுமே தாமதமாக கலந்து கொண்டார். மற்றபடி அனைத்து வீரர்களும் முன்பே பயிற்சியில் கலந்து கொண்டனர். ரெய்னா லேட்டாக வந்தாலும் தற்போது வலைப்பயிற்சியில் மாஸ் காட்டி வருகிறார். பல நாட்கள் கழித்து ஆடினாலும் அதற்கான சுவடே இல்லாமல் ரெய்னா கெத்து காட்டிக்கொண்டு இருக்கிறார்.
தற்போது சிஎஸ்கே அணி மும்பையில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இங்கு தோனி 2 வாரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த பயிற்சியில் தோனி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.பயிற்சியில் மிகவும் அதிரடியாக இவர் பேட்டிங் செய்து இருக்கிறார்.
நேற்று மும்பையில் நடந்த பயிற்சியில் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. முதல் விஷயம், தோனி அடுத்தடுத்து பல சிக்ஸர்களை அடித்து உள்ளார். முக்கியமாக ஸ்பின் பவுலர்களின் ஓவர்களில் அதிரடியாக சிக்ஸர், பவுண்டர்களை அடித்தார். லெக் ஸ்பின் பவுலர்கள் ஓவர்களில் தோனி சரியாக ஆட மாட்டார் என்ற கருத்து நிலவி வருகிறது.
ஆனால் நேற்று லெக் ஸ்பின் பவுலர்கள் ஓவரில்தான் தோனி ஆக்ரோஷமாக ஆடி இருக்கிறார். இன்னொரு விஷயம், நேற்று எப்போதையும் விட அதிக நேரம் தோனி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இயல்பாக அவர் பயிற்சி மேற்கொள்ளும் நேரத்தை விட கூடுதல் நேரம் பயிற்சி செய்துள்ளார்.
மும்பை மைதானத்தில் நேற்று தோனி நடந்து கொண்ட விதம் நாள் முழுக்க ஆக்ரோஷமாக இருந்துள்ளது. கடந்த சீசனில் அடைந்த தோல்வி இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அதோடு கடந்த முறை பயிற்சி மேற்கொள்ள சிஎஸ்கே அணிக்கு போதிய அவகாசம் இல்லை.
இந்த முறை இதனால் கூடுதல் நாட்கள் சென்னை அணி பயிற்சி மேற்கொண்டது. தோனி அனைத்து பணிகளையும் திட்டமிட்டு நுணுக்கமாக செய்து வருகிறார். கடந்த முறை ஏற்பட்ட தோல்விகள், அவமானங்கள் அனைத்திற்கும் தோனி இந்த முறை பதிலடி கொடுப்பார் என்று கூறப்படுகிறது.