பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், உலககோப்பை தொடருக்காக இந்திய அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது.
இதன்போது, சூர்யகுமார் யாதவ் தமிழில் தனக்கு பிடித்த நடிகர் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“நான் விஜய்யின் தீவிர ரசிகன். அவரது படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரியில் படிக்கும்போது அவரது படங்களை தியேட்டரில் சென்று பார்பேன்” என்று கூறியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் தென்னிந்திய நடிகரான விஜய்யை புகழ்ந்து பேசுவது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

