ரைசிங் பாரத் என்ற 2 நாட்கள் மாநாட்டை டெல்லியில் நியூஸ் 18 குழுமம் நடத்தி வருகிறது. நேற்று காலை 10.30 மணிக்கு மாநாடு தொடங்கி முதல் நாள் அமர்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் நாளான இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசினர். விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
மாநாட்டில் பேசிய அவர், மூன்றாவது ஆட்சி காலத்தில் முதல் 100 நாட்களுக்கு பணித்திட்டங்களை தயாரித்துள்ளோம் என்று கூறினார்.
மேலும் பேசிய பிரதமர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. வாழ்க்கையில் ஊழல் ஒரு பகுதி என ராஜீவ் காந்தி கூறினார், ஊழல் குறித்த மக்களின் எண்ண ஓட்டத்தை நாங்கள் மாற்றியுள்ளோம்; எதிர்க்கட்சிகளிடம் குவியல் குவியலாக பணம் சிக்குகிறது. ஆனால் மோடியின் உத்தரவாதத்திற்கு விளம்பரம் தேவையில்லை என எதிர்க்கட்சியை விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி, தேசிய ஜனநாயக கூட்டணியின் திட்டங்கள் ஒவ்வொரு மக்களையும் சென்று சேர்க்கின்றன, நடுத்தர வகுப்பினரை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று மோடி கூறினார். ரியல் எஸ்டேட் துறையில் நிலவிய ஊழலுக்கு முடிவுகட்டி சீர்படுத்தியுள்ளோம்; விண்வெளி மற்றும் ஸ்டார்ட்அப் துறையில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக விளங்குகிறது என்று பெருமிதம் கூறினார்.
Also Read |
21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கும் அதன் மக்களும் சொந்தமானது- பிரதமர் மோடி பேச்சு
முன்னதாக பேசிய அமைச்சர் அமித் ஷா, மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீர், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கில் வன்முறை 75 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவின் நலனை கருதி பல கட்சிகள் பாஜகவை ஆதரிக்கின்றன. வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக வெல்லும் இடங்கள் அதிகரிக்கும் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…