உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிக்கும் கிடைக்கவுள்ளபரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிக்கும் கிடைக்கவுள்ளபரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி ஜுன் 7ஆம் திகதி லண்டனின் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
வெற்றி பெறும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 8,00,000 டொலர் பரிசுத்தொகையாக கிடைக்கும்.
அத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு (3வது இடம்) 4,50,000 டொலர் இங்கிலாந்து அணிக்கு (4வது இடம்), 3,50,000 டொலர், 5வது இடம் பிடித்த இலங்கை அணிக்கு 2,00,000 டொலர்களும் கிடைக்கும்.