ஃபலுஜாவில் ஆயுதபாணிகள்
இராக்கில் பெரும்பாலும் இஸ்லாமிய அரசு போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபலுஜா நகரில் உள்ள ஒரு மருத்துவமனை, அரசாங்க படையினரின் ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
அப்பாவி மக்களின் மரணத்தை தவிர்க்கும் வகையில், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட நகரங்களில் உள்ள குடிமக்கள் பகுதிகள் மீது ஷெல் வீசுவதை நிறுத்துமாறு இராக்கின் புதிய பிரதமர் ஹைதர் அல் அபாதி அவர்கள் உத்தரவிட்ட மறுதினம் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
அந்த மருத்துவமனையின் கட்டிடத்துக்கு சேதம் விளைவித்த அந்த ஷெல் தாக்குதலில் மருத்துவமனை ஊழியர் ஒருவரும் காயம் அடைந்ததாக ஃபலுஜாவில் உள்ள அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.