அரசு ஆதரவு பெற்று வரும் ஓய்வு கால திட்டங்கள் பல தனி நபர்களை அவர்களது எதிர்கால பொருளாதார நிலைப்பாட்டை உறுதி செய்யும் பொருட்டு முதலீடு செய்வதற்கு அனுமதிக்கிறது. இந்த ஆப்ஷன்களில் எம்பிளாயி பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) ஆகிய இரண்டும் பலரது தேர்வுகளாக உள்ளது. இந்த ஒவ்வொரு திட்டமும் தனித்தனி வித்ட்ரா செய்வதற்கான விதிகள், தகுதி நிபந்தனைகள் மற்றும் தொடர்புடைய அபாயங்களை கொண்டுள்ளன. இந்த இரண்டு திட்டங்கள் பற்றிய ஒரு ஒப்பீட்டை இந்த பதிவில் பார்க்கலாம். EPF என்பது பிரத்தியேகமாக தனியார் துறையில் உள்ள எம்ப்ளாயிகளுக்காக கிடைக்கிறது, அதே நேரத்தில் PPF என்பது தனியார் மற்றும் அரசு ஆகிய இரு பிரிவில் உள்ள ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது.
EPF:
இந்த ஓய்வு கால சேமிப்பு திட்டத்தில் எம்ப்ளாயர் மற்றும் எம்ப்ளாயி ஆகிய இருவருமே பங்களிப்புகளை தர வேண்டும். இந்த பங்களிப்பானது வருமானத்தின் அடிப்படையில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. பாதி அளவு பணத்தை வித்ட்ரா செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும் முழு தொகையையும் ஓய்வு காலத்திற்கு பிறகு மட்டுமே பயன்படுத்த முடியும்.
எம்ப்ளாயர் மற்றும் எம்பிளாயி ஆகிய இருவரும் அடிப்படை சம்பளம் மற்றும் டியர்னஸ் அளவன்ஸில் 12 சதவீதம் பங்களிக்க வேண்டும்.
தற்போது இதற்கு 8.25%, வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில குறிப்பிட்ட நிபந்தனைகளை தவிர ஓய்வு காலத்திற்கு முன்பு பணத்தை வித்ட்ரா செய்வது சற்று கடினம்.
இந்தத் திட்டத்தில் செய்யும் பங்களிப்பிற்கு வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C-யில் டிடக்ஷன் கோரலாம்.
PPF:
PPF என்பது ஓய்வு கால பணத்தை சேமிக்க உதவும் அதேவேளையில் வரி சுமையை குறைப்பதற்கு உதவுகிறது. 15 வருடங்கள் குறைந்த கால அளவுடன் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு PPF பாதி அளவு பணத்தை வித்ட்ரா செய்வதற்கு அனுமதிக்கிறது.
இந்த திட்டம் அனைத்து இந்திய குடிமக்கள் மற்றும் NRIகளுக்கு கிடைக்கிறது.தற்போதைய நிலவரப்படி இதற்கு 7.1%, வட்டி கொடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் செய்யும் பங்களிப்புகள், வட்டி மற்றும் மெச்சூரிட்டி தொகைக்கு வரி கிடையாது.
EPF vs PPF: ஒப்பீடு
PPF இல் ஒருவர் குறைந்தபட்சமாக 500 ரூபாயும், அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாயும் முதலீடு செய்யலாம். அதே நேரத்தில் EPF என்பது அடிப்படை சம்பளம் மற்றும் DA இல் 12 சதவீதம். தேவைப்பட்டால் அதிகரித்துக் கொள்ளலாம். PPF இன் கால அளவு 15 வருடங்கள், மேலும் 5 வருடங்களுக்கு தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளலாம். EPF அக்கவுண்ட்டை ரிட்டயர்மென்ட்க்கு பிறகு அல்லது சப்ஸ்கிரைபர் 2 மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மூடலாம்.
இதையும் படிங்க:
GST முதல் FASTag வரை.. மார்ச் மாதம் முதல் 6 முக்கிய மாற்றங்கள்
EPF vs PPF: குறைபாடுகள்
PPF
PPF இல் பாதி அளவு பணத்தை 5 வருடங்கள் கழியாமல் வித்ட்ரா செய்ய முடியாது. 15 வருடம் மெச்சூரிட்டி காலத்தை கருத்தில் கொள்ளும் பொழுது இதே கால அளவு கொண்ட பிற சேமிப்பு திட்டங்களான மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஃபிக்சட் டெபாசிட்களை காட்டிலும் PPF குறைவான வட்டியை தருகிறது.
EPF
EPFO இல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பலன் பெற முடியும். சுயதொழில் செய்பவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் இதற்கு தகுதி பெற மாட்டார்கள்.
PPF vs EPF: இரண்டு திட்டங்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாமா?
கட்டாயமாக நீங்கள் PPF மற்றும் EPF ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களுக்கு பெரிய அளவிலான ஓய்வு கால நிதி கிடைக்கும்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உங்களுடைய வருமானம் மற்றும் பொருளாதார இலக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…