நாம் ஒரு நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருக்கும்போது, நம் துறை சார்ந்த சாதக, பாதகங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் செய்வது ஆபத்தாக முடியும் என்று உணர்த்துவதைப் போல அமைந்துள்ளது சமீபத்திய செய்தி.
பெங்களூருவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர் ஒருவர், ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த அடுத்த நாளே பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். டிவிக் எனப்படும் ஃபார்மா என்ற நிறுவனத்தில் ஜிஷ்ணு மோகன் என்பவர் பணியாற்றி வந்தார். தன் துறையில் தற்போது நிலவி வரும் அபாயங்கள் குறித்து பட்டியலிட்ட அவர், ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்த தன் கவலையை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது.
அடுத்த நாளே அந்த நிறுவனம் இவரை பணிநீக்கம் செய்துவிட்டது. இத்தனைக்கும் கடந்த 4 ஆண்டுகளாக இவர் அங்கே பணி செய்து வருகிறார். ஜிஷ்ணு மோகனின் சொந்த ஊர் கேரள மாநிலம், கொச்சி ஆகும். அங்கே வீட்டில் இருந்தபடியே அவர் தற்போது பணியாற்றிக் கொண்டிருந்தார். கடந்த 7ஆம் தேதி டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “தகவல் தொழில்நுட்ப துறையில் நிலவுகின்ற ஆட்குறைப்பு நடவடிக்கையானது என்னை மிகுந்த கவலை அடையச் செய்கிறது. என் பணி சார்ந்த வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு நான் நம்பிக்கையை இழந்திருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்தும் டிவிட்டரில் தகவலைப் பகிர்ந்து கொண்ட மோகன், தனக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவி செய்யுமாறு டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, டிவிட்டரில் எண்ணற்ற யூசர்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். சிலர் அவருடைய ரெஸ்யூமை நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்வதாகக் கூறினர். இன்னும் சிலர், எந்தெந்த நிறுவனங்களில் தற்போது பணியிடம் காலியாக உள்ளது என்பது குறித்த விவரங்களைக் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க:
‘‘ஏலியனோடு மூன்று மாதங்கள் வசித்தேன்’’ அதிர்ச்சியை கிளப்பும் அமெரிக்க ராணுவ பைலட்
சறுக்கி வரும் ஐடி துறை
கடந்த ஆண்டில் இருந்தே ஐடி துறை தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. புத்தாண்டிலும் எந்தவித மாற்றமும் இல்லை. மெட்டா, கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பு நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. சினாப்சாட் நிறுவனத்தில், உலகளாவிய தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை குறைக்க இருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஏஐ தொழில்நுட்பம் எதிரொலி
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஊழியர்கள் செய்யக் கூடிய வேலைகளை சில நொடிகளில் கச்சிதமாகவும், துல்லியமாகவும் இந்தத் தொழில்நுட்பம் செய்து முடிப்பதால், செலவினத்தை குறைக்க ஆட்குறைப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…