கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் இஸ்ரேல் – காஸா போர் நடந்து வருகிறது. இந்தப் போர் சர்வதேச கவனத்தையும், தொடர் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் சான் அன்டோனியோவைச் சேர்ந்தவர் ஆரோன் புஷ்னெல் (25). அமெரிக்க விமானப்படையில் உயர் பதவியில் இருந்த இவருக்கு, நெருங்கிய இராணுவ தொடர்புகள் இருந்தன.
இந்த நிலையில், ஆரோன் புஷ்னெல் காஸா போர் தொடர்பாக தொடர்ந்து அதிருப்தியில் இருந்துவந்தாகத் தெரிகிறது. அது தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளையும் முன்னெடுத்திருக்கிறார். இந்த நிலையில், இஸ்ரேல் – காஸா போர் முடிவுக்கு வராத நிலையில், வாஷிங்டன் டிசியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது இராணுவ சீருடை அணிந்திருந்த ஆரோன் புஷ்னெல்,“பாலஸ்தீனத்தை விடுவித்துவிடுங்கள்” என்று முழக்கமிட்டு தீ வைத்துக்கொண்டார். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும், அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த தற்கொலை தொடர்பாக வாஷிங்டன் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY