இந்தியத் தூதரகம் அமெரிக்க அதிகாரிகளுடன் இந்த விஷயம் குறித்து விவாதித்து, மகளை இழந்த குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். வெளி விவகார அமைச்சர் இந்த விவகாரத்தைத் தனது சக வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறி சுதந்திரமான விசாரணையைக் கோரவும் நான் கேட்டுக்கொள்கிறேன். உயர்ந்த லட்சியங்களைக்கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது சோகமானது. ஆனால் அதைவிடச் சோகம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவருக்கு நீதியை அலட்சியம் செய்வது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து சியாட்டிலில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகார்பூர்வ ட்விட்டர் பதிவில்,“ஜாஹ்னவி கந்துலாவின் வழக்கு தொடர்பாக அவரின் குடும்பப் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு நீதியை உறுதிசெய்வதில் தொடர்ந்து அனைத்து ஆதரவையும் வழங்கிவருகிறோம். சரியான தீர்வுக்காக சியாட்டில் காவல்துறை உட்பட உள்ளூர் அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை வலுவாகப் பேசிவருகிறோம். இந்த வழக்கு இப்போது சியாட்டில் சிட்டி அட்டர்னி அலுவலகத்துக்குப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சியாட்டில் காவல்துறையின் நிர்வாக விசாரணை முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். மேலும், வழக்கின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY