மறைந்த சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் உடலுக்கு யாழ். வடமராட்சி, உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தி யாழ். வடமராட்சியை நேற்று மாலை சென்றடைந்த பின்னர் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சாந்தனின் இறுதிக்கிரியைகள், அவரது சகோதரியின் இல்லத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகும்.
இறுதிக்கிரியைகள் நிறைவு பெற்றதும் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து புகழுடல் சாந்தனின் பூர்வீக இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும்.
வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்துக்குப் உடல் எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (a)