அதிகாரத்தைப் பெறுவதற்கான குறுகிய நோக்கங்களுடன் இந்த வெற்றிகளை மறைத்த அரசியல் மாயைகள் காரணமாக இன்று நாடு எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை விமர்சன ரீதியாக ஆராய்வது, நாம் பெற்ற சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க உதவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பழைய பிரச்சினைகளுக்குப் பழைய தீர்வுகள் அல்ல, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்திற்குப் பின்னர் நாம் உரிமையாகப் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இந்த தருணத்தில் நமது பொறுப்பாகும்.
இதற்காக நிகழ்காலத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு இனவாத மதவாத குறுகிய சிந்தனைகளைத் தோற்கடித்து ஒன்றிணைவதற்கு இந்த சுதந்திர தினத்தில் உறுதியேற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். (a)