Last Updated:
RAC Train Ticket | RAC டிக்கெட்டுகள் பொதுவாக ஒரே சைடு லோவர் பெர்த்தை ஷேர் செய்யக்கூடிய இரண்டு பயணிகளுக்கு நியமிக்கப்படும். பகல் சமயத்தில் இரண்டு பயணிகளுமே அந்த லோவர் பெர்த்தில் அமர்ந்து பயணிக்கலாம்.
RAC அல்லது ரிசர்வேஷன் அகைன்ஸ்ட் கேன்சலேஷன் (Reservation Against Cancellation) என்ற ரயில்வே டிக்கெட் உங்களிடம் இருந்தால் நீங்கள் எந்த ஒரு இந்திய ரயில்வே ரயிலிலும் பயணிக்கலாம். ஆனால் உங்களுக்கு இருக்கை உறுதி செய்யப்படாது. கன்ஃபார்ம் டிக்கெட் வைத்துள்ள ஒரு ரயில் பயணி ரயிலில் ஏறவிட்டாலோ அல்லது தன்னுடைய டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு முன்பு கேன்சல் செய்தாலோ RAC டிக்கெட் வைத்திருப்பவருக்கு அந்த நபருடைய பெர்த் நியமிக்கப்படும். ஆனால் அப்படி எந்த ஒரு கேன்சலேஷனும் நடைபெறாவிட்டால் என்ன ஆகும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
RAC டிக்கெட் வைத்திருப்பவருக்கு எந்த ஒரு இருக்கையும் நியமிக்கப்படாத சூழ்நிலையில், பெரும்பாலும் இரு தரப்பினர் இடையே வாக்குவாதங்கள் மற்றும் சில சமயங்களில் ரயில்களுக்குள் அமளி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் இந்த சூழ்நிலையில் இருக்கை ஏற்பாடு செய்ய குறிப்பிட்ட ஒரு சில விதிகள் உள்ளன.
RAC இருக்கைகளுக்கான விதிகள்
RAC டிக்கெட்டுகள் பொதுவாக ஒரே சைடு லோவர் பெர்த்தை ஷேர் செய்யக்கூடிய இரண்டு பயணிகளுக்கு நியமிக்கப்படும். பகல் சமயத்தில் இரண்டு பயணிகளுமே அந்த லோவர் பெர்த்தில் அமர்ந்து பயணிக்கலாம். இரவு நேரத்தில் அவர்கள் தூங்குவதற்கு அந்த பெர்த்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். எனினும் கன்ஃபார்ம் டிக்கெட் வைத்துள்ள சைடு அப்பர் பெர்த் கொண்டவர் பகல் நேரத்தில் லோவர் பெர்த்தில் அமர்ந்திருப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்.
ரயில்வே கையேட்டை பொருத்தவரை, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதிகாரப்பூர்வமாக தூங்குவதற்கான நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சைடு அப்பர் பெர்த் பயணி சைடு பெர்த்தை காலி செய்துவிட்டு தனக்கென நியமிக்கப்பட்ட இருக்கைக்கு செல்ல வேண்டும். ஒருவேளை அவர்கள் சைடு லோவர் பெர்த்தை பயன்படுத்துவதற்கு தங்களுக்கு உரிமை உண்டு என்று உங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் டிரெயின் டிக்கெட் எக்ஸாமினர் (Train Ticket Examiner – TTE) -யிடம் புகார் அளித்து பிரச்சனையை நீங்கள் தீர்த்து கொள்ளலாம்.
RAC என்பது ரிசர்வேஷன் அகைன்ஸ்ட் கேன்சலேஷன் என்பதை குறிக்கும். ஒரு கன்ஃபார்ம் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டால் ஒரு RAC பயணிக்கு கன்ஃபார்ம் செய்யப்பட்ட அந்த பெர்த் நியமிக்கப்படும். அதே நேரத்தில் மற்றொரு பயணி சைடு லோவர் பெர்த்தின் பாதி இருக்கையில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார். இரண்டு பயணிகளுமே தங்களுடைய டிக்கெட் கன்ஃபார்ம் ஸ்டேட்டஸுக்கு வரும் வரை இருக்கையை ஷேர் செய்ய வேண்டும்.
RAC சீட் அலாட்மென்ட் ஒவ்வொரு கோச்சிலும் 12 முதல் 14 RAC பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். இது கோச்சின் வகையை பொறுத்து மாறுபடும். இது தெர்டு AC மற்றும் ஸ்லீப்பர் கோச்சுகளுக்கு பொருந்தும். RAC பெர்த்களின் சரியான எண்ணிக்கை என்பது ஒரு கோச் ICF (சிறிய) அல்லது IHB (பெரிய) மாடலாக இருக்கிறதா என்பதை பொறுத்து அமையும். இதில் 6 முதல் 7 பெர்த்துகள் வழக்கமாக ஒவ்வொரு கோச்சிலும் RAC -க்காக ரிசர்வ் செய்யப்படும்.
January 01, 2025 2:26 PM IST