உலகின் மிகப் பெரிய பணக்காரர்களையும் அவர்களின் சொத்து மதிப்புகளைக் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உலகின் பணக்கார நாயும் அதன் ஆடம்பர வாழ்க்கை குறித்தும் உங்களுக்குத் தெரியுமா?!
400 மில்லியன் சொத்து மதிப்புகளோடு ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயான ஆறாம் குந்தர் (Gunther VI) உலகின் மிகப் பெரிய பணக்கார நாயாகக் கருதப்படுகிறது.
இவ்வளவு சொத்துகள் சொந்தமானது எப்படி?!
ஜெர்மனியைச் சேர்ந்த செல்வ சீமாட்டியான karlotta Leibenstein தனது மகனின் மரணத்திற்குப் பிறகு வாரிசு இல்லாமல் இருந்தார். 1992-ல் அவர் இறக்கும்போது தனக்கென்று குடும்பம் இல்லாததால், தனது சொத்து முழுவதையும் பாசத்தோடு வளர்த்த நாயின் மீது எழுதி வைத்துள்ளார். அந்த நாய் குந்தரின் தாத்தா `Gunther III’ என்று கூறப்படுகிறது.
தன்னிடமிருந்த 80 மில்லியன் டாலர் சொத்து மதிப்புகளையம் மூன்றாம் குந்தருக்கு எழுதி வைத்தார். இந்த சொத்து மதிப்புகள் நான்காம் குந்தருக்கு மாற்றப்பட்ட போது, அந்த சொத்தினை நிர்வகித்த மவுரிசியோ மியான் அதிக முதலீடுகள் செய்தார். இந்த முதலீட்டின் மூலம் குந்தரின் சொத்து மதிப்பு அதிகரித்தது.
இத்தாலியைச் சேர்ந்த 66 வயதான மியான் லிபென்ஸ்டீனின் மகனின் நண்பர் என்றும், `இஸ்டிடுடோ ஜென்டிலி” என்ற மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான இத்தாலிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.