Last Updated:
விளையாடிய அனைவரும் தலைசிறந்த வீரர்கள். மிக கடினமாகத்தான் இருந்தது என்றும், குகேஷுடன் மோதியது பெருமையாக இருந்தது என்றும் பிரக்ஞானந்தா தெரிவித்தார்.
கிளாசிக்கல் தொடரில் வெற்றி பெற்றது தனது செஸ் பயணத்தில் மிக முக்கியமானது என்று செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.
உலகின் முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்றது. பாரம்பரிய செஸ் தொடரான கிளாசிக்கல் தொடரில் சமபுள்ளிகள் பெற்ற குகேஷும், பிரக்ஞானந்தாவும் இறுதிப்போட்டியில் 3 சுற்றுகள் கொண்ட டைபிரேக்கர் போட்டிகளில் மோதினர். முதல் போட்டியில் தோல்வியை தழுவிய பிரக்ஞானந்தா, அடுத்தடுத்த 2 சுற்றுகளில் அபாரமாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
இந்நிலையில், நெதர்லாந்தில் நடந்த கிளாசிக்கல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று திரும்பியது மிகவும் பெருமையாக இருந்ததாக பிரக்ஞானந்தா நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். கிளாசிக்கல் தொடரில் வெற்றி பெற்றது தனது செஸ் பயணத்தில் மிக முக்கியமானது என்றும் பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.
மேலும், விளையாடிய அனைவரும் தலைசிறந்த வீரர்கள். மிக கடினமாகத்தான் இருந்தது என்றும், குகேஷுடன் மோதியது பெருமையாக இருந்தது என்றும் பிரக்ஞானந்தா தெரிவித்தார்.
அதேபோல், டைபிரேக்கர் முறை நல்ல பார்மெட் தான். ஏனென்றால் ஏற்கனவே 13 கிளாசிக்கல் போட்டிகள் ஆடியாகிவிட்டது. இன்னொரு போட்டி நடத்த முடியாது. இந்த வெற்றி எனக்கு நிறைய நம்பிக்கையை தருகிறது என்றும் பிரக்ஞானந்தா கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 04, 2025 3:16 PM IST