Last Updated:
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பால்தான் சாதிக்க முடிந்ததாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கமலினி தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அரை சதம் விளையாடியது மகிழ்ச்சியளித்ததாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “அம்மா, அப்பா ஆதரவால் தான் இந்த நிலையை அடைந்தேன். நானும் நிறைய உழைப்பை கொடுத்துள்ளேன்” என்றும் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவதில் பெருமைப்படுகிறேன் என்றும், அடுத்த சீனியர் அணிக்கு செல்வதுதான் இலக்கு என்றும் கமலினி தெரிவித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 04, 2025 8:30 PM IST