சேவல்களை போட்டிக்கு தாயார்படுத்தும் கலையை புத்தகத்தில் படித்தோ, காசு கொடுத்தோ கற்றுக்கொள்ள முடியாது என்றும் 21 நாட்கள் விரதம் இருந்து சேவல்களுக்கு சத்தான உணவுகள் கொடுத்து பயிற்சி, மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை தவிரத்து சேவல்களை இளைஞர்கைள் தயார் செய்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சேவல்களை வளர்த்து போட்டிக்கு விடும் kkk என்ற குழுவினர் சேவல்களை தாயார் செய்து சேவல் சண்டை போட்டிக்கு தமிழ்நாடு முழுவதும் அரசு அனுமதியுடன் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்று வருகின்றனர். அரசு ஜல்லிக்கட்டு, கிடா சண்டைகள் போன்ற போட்டிகளை நடத்துவது போல் அனுமதியுடன் தமிழர்கள் வீர விளையாட்டில் ஒன்றான சேவல் சண்டையையும் தமிழ்நாடு முழுவதும் நடத்தி அழிந்துவிடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் சேவல் சண்டையில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து KKK என்ற குழு அமைத்து சேவல்களுக்கு பயிற்சி அளித்து தமிழ்நாட்டு முழுவதும் அரசு அனுமதியுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்று வருவதாக குட்டிமணி என்பவர் தெரிவித்தார்.
இந்த சேவல் சண்டை கலையை பொருத்தவரையில் காசு கொடுத்தோ, புத்தகத்தில் இருந்தோ கற்றுக்கொள்ள முடியாது என்றும், சண்டை சேவல்கள் பல போட்டிகளில் கலந்து கொண்ட குருநாதர்களுக்கு துணையாக சிஷ்யன்களாக இருந்து அவர்கள் அளிக்கும் பயிற்சியை கண்டு அதில் இருந்துதான் கற்று வந்துள்ளதாக குட்டிமணி தெரிவித்தார்.
போட்டியில் பங்கேற்கும் சேவலுக்கு தொடர்ந்து 21 நாட்கள் தீவிரமாக பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி, தேய்த்தல் பயிற்சி என கொடுத்து சத்தான உணவுகள் வழங்கி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அனுமதியோடு நடைபெறும் போட்டியில் சேவல்கள் பங்குபெற்று வருகிறது. கடந்த மாதம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற போட்டியில் ஜந்து சேவல்கள் பங்கேற்று, மூன்று வெற்றி பெற்று இரண்டு சமநிலை பெற்றது. அரசு வழிமுறைகளை பின்பற்றி அதன்படிதான் போட்டியில் பங்கேற்போம்.
சண்டை சேவல்களை பொருத்தமட்டில் ஒருவகையான சேவல்கள் தான் உள்ளது. இதற்கு வெப்போர் சேவல் என்று பெயர் நிறம்தான் மாறுபடும் ஆனால் அனைத்துமே வெப்போர் சேவல்கள் தான் என தெரிவித்தார். சேவல் சண்டைக்கு 21 நாட்கள் பயிற்சி அளிக்கும் போது ரூ.3000 ஆயிரத்தில் இருந்து ரூ.5000 ஆயிரம் வரை செலவாகும். 50-க்கும் மேற்பட்ட சேவல்கள் இருக்கும் இடத்தில் ஒன்றோடு ஒன்று சண்டையிடாமல் இருக்க தனித்தனியாக கூண்டுகள் அமைத்துள்ளோம். இதற்கே மூன்று லட்சம் வரையிலும் செலவாகியது.
சேவல் போட்டியில் பங்கேற்க வைப்பது பணம் சம்பாதிப்பதற்காக கிடையாது. இந்த கலையை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் தான். சேவல்களை சண்டைக்கு தயார் செய்ய கையில் எடுத்து விட்டோம் என்றால், சுவாமிக்கு மாலை போட்டதற்கு சமம் போல் மது அருந்துதல், சிகரெட் பிடிப்பது போன்ற தீய பழக்கங்கள் தவிர்த்து முழு வேலையாக சேவல்கள் பயிற்சி செய்வது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருக்கும்.
மேலும், சிறியவயது இளைஞர்கள் இந்த சேவல் சண்டையில் இருப்பதால் கெட்டப் பழக்கவழக்கங்களை பின்பற்றாமல் நன்றாக உள்ளார்கள். ஆடு, மாடு வளர்ப்பது போன்று சேவல்களையும் வளர்த்து போட்டிகளுக்கு அனுப்புவது நல்ல பழக்கம் தான் என தெரிவித்தார்.
சேவலானது ஒருவயது வந்தவுடன் அதனை போட்டிக்கு தயார் செய்வோம், அதிகப்பட்சமாக 10 ஆண்டுகள் வரை ஒரு சேவல் உயிருடன் இருக்கும். உணவுகள் சாதாரண நாட்களில் கம்பு, கேப்பை, கோதுமை கொடுப்போம், போட்டி காலங்களில் மிகவும் சத்தான முட்டை, பாதாம், 21 சிறு மற்றும் பெருதானியங்கள் கொடுப்போம்.
ராமநாதபுரம் சேவல்கள் என்றால் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் சேவல் சண்டைகள் நடத்துவதற்கு அனுமதி குறைவாகவே உள்ளது எனவும், நீதிமன்றங்கள் அனுமதி கொடுத்தாலும். எந்த பகுதியில் நடக்கிறதோ அந்த பகுதி காவல்துறையினர் நடத்த அனுமதிப்பது இல்லை என வேதனை தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு, கிடா சண்டைகளுக்கு அனுமதி கொடுப்பதுபோல் சேவல் சண்டைக்கு அனுமதி கொடுத்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் அரசுக்கு குட்டி மணி கோரிக்கை விடுத்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…