Last Updated:
பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிதி 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராஃப், உசைத் தலாத் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான மேட்ச்சில் பாகிஸ்தான் வெற்றிபெற 134 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9 ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
6 போட்டிகளைக் கொண்ட இந்த சுற்று ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் 4 சுற்றில் இதுவரை 2 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதில் வங்கதேச அணி இலங்கையையும், இந்திய அணி பாகிஸ்தானையும் வென்றுள்ளது. இந்நிலையில் 3 ஆவது போட்டி தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா 1 போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் இந்த போட்டியில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் ஏற்படும்.
இந்த சூழலில் இன்றைய மேட்ச்சில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கையின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.
அந்த அணியில் கமிந்து மெண்டிஸ் மட்டும் 44 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். சமிகா கருணா ரத்னே 17 ரன்களும், ஹசரங்கா 15 ரன்களும், கேப்டன் சரித் அசலங்கா 20 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 133 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிதி 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராஃப், உசைத் தலாத் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
September 23, 2025 10:09 PM IST


