குஜராத்தில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வருகின்ற ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளன. இதற்காக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மட்டுமின்றி, உலக அளவிலான தொழிலதிபர்கள், அரசியல், சினிமா பிரபலங்களும் விழாவில் பங்கேற்கவுள்ளனர். நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஏற்கனவே வருகை தந்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் புகழ்பெற்ற பாப் படகியான ரிஹானா, நடிகர் அர்ஜூன் கபூர் ஆகியோர் ஜாம்நகரில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தனர்.
இந்நிலையில், பேஸ்ஃபுக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் ஜாம்நகர் வருகை புரிந்தார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார்.
#WATCH | Gujarat | Actor Shah Rukh Khan along with his family arrives in Jamnagar for the three-day pre-wedding celebrations of Anant Ambani and Radhika Merchant. pic.twitter.com/1PP6p3fZJb
— ANI (@ANI) February 29, 2024
அத்துடன், ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் முகமது அல் அப்பார் வந்த நிலையில், நட்சத்திர தம்பதியான ரன்பீர் கபூர் – ஆலியா பட் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோரும் வருகை தரவுள்ளனர். மூன்று நாட்கள் களைகட்டும் முகேஷ் அம்பானியின் இல்ல விழாவை மேலும் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…