• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொடரும் விலை உயர்வால் பணி ஆணைகள் இல்லை: 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் ஊர் திரும்பினர் | 10000 goldsmiths return home due to continued price hike

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தொடரும் விலை உயர்வால் பணி ஆணைகள் இல்லை: 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் ஊர் திரும்பினர் | 10000 goldsmiths return home due to continued price hike
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​கள் இல்​லை. இதனால் பிற மாவட்​டங்​களை சேர்ந்த 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​று​விட்​ட​தாக கோவை தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்​பிலும் தேசிய அளவில் புகழ் பெற்​றுள்​ளது. ஒரு லட்​சம் பேர் இத்​தொழிலில் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். தங்​கத்​தின் விலை வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால் நகைகளுக்​கான பணி ஆணை​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்​பாளர்​கள் சங்​கத் தலை​வர் முத்து வெங்​கட்​ராம் `இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: கோவை​யில் 40 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் உட்பட சுமார் ஒரு லட்​சம் பேர் தங்க நகை தயாரிப்பு தொழிலில் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். கரோனா தொற்​றுப் பரவலுக்கு முன் தின​மும் சராசரி​யாக 200 கிலோ அளவுக்கு தங்க நகை வணி​கம் கோவை​யில் நடை​பெற்று வந்​தது.

2020-ம் ஆண்​டுக்கு பின் தங்​கம் விலை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. மத்​திய அரசு தங்​கம் இறக்​கும​திக்கு விதிக்​கப்​பட்ட வரியை 15 சதவீதத்​தில் இருந்து 6 சதவீத​மாக குறைத்​துள்​ளது. ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் விதிக்​கப்​படு​கிறது. உலக சந்தை நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரு​கிறது. தொடரும் விலை உயர்​வால் தங்க நகை தயாரிப்​புத் தொழில் முற்​றி​லும் முடங்​கி​யுள்​ளது.

திரு​மணம் உள்​ளிட்ட பல்​வறு சுப நிகழ்​வு​களுக்​காக தங்க நகைகளை வாங்​குபவர்​களால், சில நாட்​களில் மட்​டும் ஓரளவு வியா​பாரம் நடக்​கிறது. மற்ற நாட்​களில் வியா​பாரம் முற்​றி​லும் முடங்​கி​யுள்​ளது. நகைகளுக்கு போது​மான பணி ஆணை​கள் கிடைக்​காத​தால் பொற்​கொல்​லர்​கள் பலர் தங்​களின் சொந்த ஊர்​களுக்​குச் சென்று விட்​டனர். கோவை​யில் மொத்​தம் 40 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் உள்​ளனர். தற்​போது நில​வும் நெருக்​கடி​யான சூழல் காரண​மாக 10 ஆயிரம் பேர் தங்​களின் சொந்த ஊர்​களுக்​கு சென்​று​விட்​டனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



Read More

Previous Post

தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி | omni bus stopped at tamil nadu border bengaluru passengers in trouble

Next Post

உதவி செய்து கின்னஸ் சாதனை படைத்த பிரபல பாடகி | Makkal Osai

Next Post
உதவி செய்து கின்னஸ் சாதனை படைத்த பிரபல பாடகி | Makkal Osai

உதவி செய்து கின்னஸ் சாதனை படைத்த பிரபல பாடகி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin