Last Updated:
தனது இரண்டாவது திருமணம் சில மாதங்களுக்கு முன்பு, அதாவது ஆகஸ்ட் 2, 2025 அன்று நடந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தனது 2ஆவது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். 10 மாதங்களுக்கு முன்புதான் அவர் முதல் திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில் 2ஆவது திருமணம் குறித்த தகவல்கள் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ரஷித் கான் டி20 கிரிக்கெட்டின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராவார். அவர் இதுவரை 108 டி20 சர்வதேச போட்டிகளில் 13.69 என்ற சராசரியில் 182 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆப்கன் அணியின் கேப்டனாக பல்வேறு போட்டிகளில் பணியாற்றி முக்கிய வெற்றிகளை ரஷித் கான் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால் அவர் அந்த நாட்டின் மதிப்பு மிக்கவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
ரஷித் கான் தனது முதல் திருமணத்தை அக்டோபர் 2024-இல் காபூலில் செய்து கொண்டார். அவரது மூன்று சகோதரர்களும் (அமீர் கலீல், சாகியுல்லா மற்றும் ரசா கான்) அதே இரவில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் ரஷித் கான் தனது இரண்டாவது திருமணம் சில மாதங்களுக்கு முன்பு, அதாவது ஆகஸ்ட் 2, 2025 அன்று நடந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ரஷித் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆகஸ்ட் 2, 2025 அன்று, என் வாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தமுள்ள அத்தியாயத்தை நான் தொடங்கினேன். நான் எப்போதும் விரும்பிய அன்பு, அமைதியை கொண்ட ஒரு பெண்ணை மணந்தேன்.
முதல் திருமணத்தை ரஷித் கான் 2024 அக்டோபர் 3 ஆம் தேதி செய்திருந்த நிலையில் அடுத்த 10 மாதத்தில் 2ஆவது திருமணம் செய்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
November 12, 2025 9:02 PM IST


