Last Updated:
அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.
ஐபிஎல் அடுத்த சீசனையொட்டி மினி ஏலம் இன்னும் சில நாட்களில் நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
காலக்கெடுவான நவம்பர் 15 நெருங்கி வரும் நிலையில், அணிகள் தங்கள் இறுதிப் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளன
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிரேட் முறையில் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பதிலாக கேப்டன் சஞ்சு சாம்சனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை விடுவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இரண்டு வீரர்களை வர்த்தகம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
இது நேரடிப் பரிமாற்றமாக இல்லாமல், இரு வீரர்களையும் தனித்தனியாகப் பணம் கொடுத்து வாங்குவதற்கான பரிவர்த்தனையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.
அதேசமயம், ஷர்துல் தாக்கூர் ரூ. 20 லட்சம் அடிப்படை விலைக்கு லக்னோ அணியில் சேர்க்கப்பட்டவர். இவர் கடந்த சீசனில் 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
November 12, 2025 10:27 PM IST


