கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து கோவிட்-19 என்ற கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானவர்களின் உயிரை பலிகொண்டது. ஆனால் அந்த தொற்றுக்கு தடுப்பூசியை அனைவரும் செலுத்தியப் பின்னர் அதன் தாக்கம் குறைந்தது.
இந்நிலையில் தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 26,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளுக்கு சராசரியாக 250 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஓய் யே சுங், “அடுத்த இரண்டு அல்லது நான்கு வாரங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம். 60 வயதுக்கு மேற்பட்டோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர். கடந்த 12 மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் உடனடியாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதையும் படிக்க:
அதிக சக்திவாய்ந்த ராணுவம் கொண்ட நாடு எது தெரியுமா? இந்தியாவிற்கு எந்த இடம்?
மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரிக்கப்படுவதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. மருந்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா ஒரு பரவாலன ஒருவகை நோய் என்பதால், எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்க அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
